Administrator

MyPPP தேசிய முன்னணீயில் இருந்து வெளியேற்றமா ?

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி யாருக்கென்ற முடிவு இறுதியில் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஆட்னானின் அறிவிப்புக்குக் பிறகு ம.இ.காவுக்கு சாதகமனதால் அதிருப்தி அடைந்திருக்கிறார் டான் ஶ்ரீ எம்.கேவிஎஸ்.

இதனூடே, இன்று நண்பகல் வேளையில் மை.பிபிபி தலைமையகத்தில் பத்திரிகை சந்திப்புக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அக்கூட்டத்தில் தனது கட்சியின் முடிவினை அவர் தெரிவிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரன் மலை தொகுதிக்கு பதிலாக சிகாம்புட் தொகுதியில் போட்டியிட தேசிய முன்னணி வாய்ப்பு வழங்கியது தனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததென்றும் அதை தாம் ஏற்கப்போவதில்லை என்றும் தனது பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

மேலும் கூறுகையில், தேசிய முன்னணி இவ்வாய்ப்பினை 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கி இருக்க வேண்டும். அப்படி வழங்கியிருந்தால் நாங்கள் நடப்பில் கேமரன் மலையில் செய்த எல்லா நடவடிக்கைகளையும் சிகாம்பூட்டில் செய்திருப்போம் என்றார்.

தேசிய முன்னணியின் முடிவு பாதகமாக அமைந்தது மை.பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டான் ஶ்ரீ எம்.கேவிஎஸ் மற்றும் அவர்தம் ஆதரவாளர்களுக்கும் வேதனையை அளித்தாலும் தேசிய முன்னணி மீது உல்ல அக்கட்சியின் நிலைபாட்டில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும்.

எனினும், இவ்விஷயத்தை ஊடகம் பூதாகரமாக்கி மை.பிபிபி நம்பிக்கை கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது என்று வெளியாக்கிய வதந்தியை நிறுத்த வேண்டும். அல்லது, உண்மை முடிவு என்ன என்பதை மை.பிபிபி தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.

மை.பிபிபியின் அதிகாரப்பூர்வ வரும் வரை காத்திருப்போம்.