Administrator

GE’14:Segamat-டாக்டர் சுப்ரமணியம் செய்தச் சேவயினால் மீண்டும் வெற்றியை நிலைநாட்டுவார்

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

நாட்டின் 14வது பொதுத்தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. அதனூடே நாடுமுழுவது தேர்தல் வேலைகள் அனல் பறக்கின்றன. அந்த அளவில் சிகாமாட் தொகுதியிலும் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன.

இம்முறை மும்முனை போட்டியை சந்திக்கும் டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களுக்கு சவாலாகத்தான் இருக்கும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. இருந்தாலும் அவரின் வெற்றியானது இம்முறையும் உறுதிச்செய்யப்படும் என்று அவ்வட்டார மக்கள் சூழுரைத்துள்ளனர்.

ஏனெனில், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியானது டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் மூன்றுத் தவனை வெற்றித் தொகுதியாகும். சிகாமாட் மக்களின் பார்வையில் டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நல்லதொரு தலைவராகவும் சொல்லின் செல்லவனாகவும் திகழ்கிறார்.

வெற்றிபெற்றக் காலம் தொடங்கி அவர் அத்தொகுதில் கடமையாற்றத் தவறியதில்லை. தம் மக்களின் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வினை கண்டுள்ளார் என்றும் கூறுகின்றனர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியாகும். ஒரு காலத்தில் அப்பள்ளிக்கூடம் வளர்ச்சியில் பின்தங்கியிருந்தது. ஆனால் டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் தலையீட்டால் இன்றுத் துரித வளர்ச்சிக் கண்டுள்ளது. குறிப்பாக 2.1 மில்லியன் அரசாங்க நிதி ஒதுக்கீட்டின் வழி சிறந்த முறையில் செயல்படுகிறது என்று மக்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் எத்தனையோ நற்காரியங்கள் அவரால் அத்தொகுதி மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆக போட்டி கடுமையானாலும் வெற்றி என்பது உறுதியே என்று நம்பத்தகுந்த வட்டங்கள் கூறுகின்றன. எதுவாயினும் என்னை ஆதரித்த சிகாமாட் மக்களை நான் கைவிடமாட்டேன் என்றும் தனது மக்களும் தன்னை ஒருபோது ஆதரிக்கத் தவற மாட்டார்கள் என்று சிகாமாட், ஜெமந்தா இந்தியர்களிடையே உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

இம்முறை டத்தோஶ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தை எதிர்த்து பிகேஆரின் வேட்பாளர் சந்தாரா குமாரும் பாஸின் வேட்பாளர் கைருல் பாயிசியும் போட்டியிடுகிறனர் என்பது குறிப்பிடத்தக்கது.