Administrator

வெற்றியென்பது தொடக்கம் அல்ல தொடர்ச்சி அதற்கு டத்தோ வி.எஸ்.மோகன் சிறந்த உதாரணம்.

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

 

வெற்றியின் முதல் படி தோல்வி என்றாலும் அவ்வெற்றியானது நிலைபெற வேண்டுமென்றால் தொடர்ச்சியில் நிலைபெறவேண்டும். அப்படிப்பட்ட ஒரு வெற்றிதான் மாபெரும் வெற்றியாய் அமையும். அவ்வளவில் ம.இ.காவின் தேசிய தகவல் பிரிவு தலைவாரன டத்தோ வி.எஸ்.மோகன் தனது அரசியல் வாழ்கையில் எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்கிறார் என்றால் அது மிகையாகாது.

கடந்த 2008-இல் ஜெராம் பாடாங் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு நெகிரி மாநில அரசின் ஆட்சிக்குழு உறிப்பினராய் பதவிவகித்து தனது சேவையை தொடர்ந்தார். அக்காலக்கட்டத்திலேயே மக்களுக்கான தேவைகளை கண்டறிந்து செவ்வன தனது சேவையை செய்ததன் பலனாக 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற 13-வது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து நாடாளுமன்ற வேட்பாளராய் களம் இறங்கினார்.

ஆனாலும் அத்தேர்தலில் சிறுபான்மை வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இருப்பினும் அதயே படிப்பினையாகக் கொண்டு தனது சேவையை தொடர்ந்தார். தனது மக்களுக்கு என்றுமே நல்லதொரு சேவகனாய் இருப்பேன் என்ற நல்லெண்ணத்துடன் நெகிரி மாநில இந்தியர்களின் பிரச்சனைகளை கண்டறிந்தார். அதோடு மட்டுமல்லாமல், இது நாள் வரை அங்கு வாழும் பிற இனத்தவர்களின் பிரச்னைகளையும் தெரிந்துக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.

அவரது விடாமுயற்சியும் சகிப்புத்தன்மையும் அவரை மேலும் முன்னேறச் செய்துள்ளது. விளைவாக, இன்று அவ்வட்டார மக்களின் மனதில் நிரந்தரமாய் நிலைபெற்றுள்ளார். அஞ்சா நெஞ்சனாய் மீண்டும் இம்முறை போர்டிக்சன் நாடாளுமன்ற வேட்பாளராய் போட்டியிடுகிறார். இந்த 14-வது பொதுத்தேர்தல் அவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாய் விளங்கும் என்ற எதிர்பார்புகள் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவருகிறது. மேலும் டத்தோ வி.எஸ்.மோகன் இம்முறை வெற்றிக் கண்டு நாடாளுமன்றத்தில் மக்கள் சேவகனாய் குரல் கொடுப்பார் என்றும் பெரிதும் எதிர்பார்பதாக அவ்வட்டார மக்கள் தெரிவித்தனர்.