Administrator

மாற்றானுக்கு பொன்னாடை போர்த்தாதீர்கள்

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

மஇகா இந்நாட்டு இந்தியர்களின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. திகழ்ந்து வருகிறது என்பது சலவை செய்யப்படாத மூளை உள்ளவர்களுக்குத் தெரியும்.

மஇகா நமக்குத் தேவை இல்லை, அதனால் நமக்குப் பயனேதுமில்லை என்பவர்கள் அழுக்காற்றில் குளித்துக் கரையேறியவர்கள்.

இப்படித்தான் ஆங்காங்கே உளறிக்கொண்டிருக்கிறார்கள். விரைவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உறுப்பினர்களை அறிவிக்க இருக்கிறார்.

இதற்கு பல தரப்புகளிலிருந்து பல விதமான விமர்சனங்கள் வரலாம். வரும்.

வேண்டியவர் என்றும் ஜாதிக்காரர் என்றம் ஆள் பார்த்து சீட் கொடுத்ததாக கூச்சல் போடுவார்கள்.

மஇகாவின் 4 லட்சம் உறுப்பினர்களில் வெறும் 28 பேருக்கு மட்டுமே சட்டமன்றம், நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதி இருக்கிறது.

இவர்களை கட்சியின் தேசியத் தலைவர், பிரதமர், உளவுத்துறை, காவல் துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல பிரிவுகள் ஆராய்ந்த பின்னரே தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த மாண்புமிகுகள் மக்களுக்காக சேவை செய்யவே நியமனம் செய்யப்படுகிறார்கள், மாறாக கட்சித் தலைவருக்கல்ல.

பிரதமரும், கட்சித் தலைவரும் தேர்வு செய்த இவர்களை வரவேற்று அவர்கள் மக்களுக்காக முழு சேவையை வழங்கிட அனைத்து மஇகா வேட்பாளர்களும் வழிவிட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட அவர்களை, குறை கூறுவதும், வசை பாடுவதும் அவர்களின் வெற்றிக்கு குழி பறிப்பதும் தேவையற்ற ஒன்றாகும்.

இவர்கள் வந்து என்ன செய்யப் போகிறார்கள், மஇகா என்ன சாதிக்கப் போகிறது என்றெல்லாம் பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். மஇகா நமது பலம், நமது எதிர்காலம். சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ மஇகா வேட்பாளர்களின் வெற்றி கட்சியின் முழு வெற்றி.

தேசியத் தலைவரின் பலம் இதன் மூலம் நிரூபிக்கப்படவேண்டும்.

இதையெல்லாம் மீறி எதிர்க்கட்சியின் பேச்சைக் கேட்டு, நமக்கு நாமே எச்சில் துப்பிக்கொள்வது முட்டாள்தனம்.

கடந்த காலங்களில் ஒப்பிடும்போது எதிர்க்கட்சியின் செயலும் வாக்குறுதியும் ஆற்றில் ஓடும் நீராகப் போய்விட்டது.

குறிப்பாக மஇகாவினரே கட்சியை வலுப்படுத்த தேசிய தலைவரின் குரலுக்கு செவிசாய்த்து செயல்படுங்கள்.

வருகிற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுங்கள். நம்மை வேரோடு பிடுங்கி எறிய ஒரு கூட்டம் திட்டம் தீட்டி செயல்படுகிறது.

சேர சோழ பாண்டியன் காலத்திலிருந்தே இது செயல்படுகிறது. நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றம் தேவை என்று மாற்றானுக்கு பொன்னாடை போர்த்தாதீர்கள்.

மஇகாவை பலம் பொருந்திய கட்சியாக மீண்டும் கொண்டு வரவேண்டும்.

தேசியத் தலைவரின் கையை உயர்த்துங்கள். நமக்கான உரிமைகள் நம் முன்னே நடைபோடும்.

மஇகாவின் கொள்கைப் பாடலை ஒரு முறை பாடிப்பாருங்கள். தெளிவோடு புறப்படுவீர்கள்.

ப.ராமு
எங்கள் தமிழ் இயக்கம்