Administrator

தாப்பாவின் தங்கமகன்- டத்தோஶ்ரீ எம். சரவணன்

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

தாப்பா,08 மே- நாட்டின் பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி மக்கள் தங்கள் எதிர்காலம், அதனை வழிநடத்தப்போகும் தலைவர்கள் மீதான தீவிர சிந்தனையைக் கூர்த்தீட்டத் தொடங்கி விட்டனர். முந்தைய பொதுத்தேர்தல் சந்திக்காத உச்சக்கட்ட ஜனநாயகப் போரை இந்தப் பொதுதேர்தல் சந்தித்திருக்கின்றது. இது இந்நாள் பிரதமருக்கும் முன்னாள் பிரதமருக்குமான தர்மயுத்தம் என்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.

அரசியல் கட்சிகளின் பலத்தையும் பலவீனத்தையும் புடம் போட்டுப் பார்க்கும் களமாகத் தேர்தல்கள் அமைந்தாலும், கடந்த ஐந்தாண்டு பதவி காலத்தில்  மக்கள் பிரதிநிதிகளான தனிமனிதர்கள் ஆற்றுகின்ற சேவையே பெரும்பாலான நேரங்களின் அவர்களின் வெற்றித் தோல்விகளை நிர்ணயம் செய்கின்றன.

அதன் அடிப்படையில், நாளை நடைபெறும் பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற தங்களது தலைவருக்காக நாட்டு மக்கள் களத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆதரவுத் திரட்டி வரும் வேளையில், ‘வெள்ளி மாநிலம்’ பேராக்கின் தாப்பா நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட பல்லின மக்கள், தங்கள் அன்புத்தலைவரின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் நிதர்சனம் அதுதான். கடந்த இரண்டு தவணைகள் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினராகவும் தற்போதைய இளைஞர் விளையாட்டுத்துறை துணையமைச்சராகவும் கடமையாற்றி வருகின்ற டத்தோஶ்ரீ எம். சரவணன் மீதான மக்களின் அன்பையும் விசுவாசத்தையும் பார்க்கின்ற வேளையில் இந்த நிஜத்தை நம்பாமல் இருக்க முடியாது.

தாப்பா நாடாளுமன்ற தொகுதியின் அரசியல் வரலாற்றில் இந்தியர்களுக்கென்று தனித்த வரலாறுண்டு. Tan Sri பண்டிதன் தொடங்கி Tan Sri வீரசிங்கம் வரை அதன் பாராம்பரியத்தின் அடர்த்தி அதிகம். அதிலும் டத்தோஶ்ரீ சரவணனுக்கு இந்நாடாளுமன்றம் வழங்கப்பட்ட மிகச்சரியான முடிவுக்குப்பின் இவ்வட்டார மக்கள் கண்டு வருகின்ற வளர்ச்சியையும் எழுச்சியையும் சொல்லி மாளாது. மலேசியத் தமிழர்களைப் பொருத்தவரை மொழி மீதான பற்றிலும் சமயம் மீதான பக்தியிலும் சரவணனை தங்களது கனவுத் தலைவனாகவே பார்க்கின்றனர். துடிப்பும் துணிவும் எண்ணிய காரியத்தில் திண்ணமாக இருக்கும் ஆற்றலும் அவரின் எதிரிகளையே அவருக்கு இரசிகர்களாக மாற்றி இருக்கின்றது.

இந்தியர்கள் மீதான அக்கறை என்பதனைக் கடந்து, கடந்த பத்தாண்டுகளில் தாப்பாவில் வாழும் எல்லா மக்களுக்கும் டத்தோ சரவணன் தங்கள் வீட்டில் ஒரு ஆளாக மாறியிருக்கிறார்.

வாழ்விடம் தோறும் மண்டபம், வறுமையிருக்கும் இடமெல்லாம் மறுமலர்ச்சி, நம்பிக்கை மருத்த இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புகள், கல்விக்கு முன்னுரிமை, பொருளாதார வளப்பத்துக்கான வழிகாட்டுதல்கள் என்று தொகுதி மக்கள் மீது சரவணன் அள்ளிக் குவித்திருக்கிற அன்பு பரிசுகளின் அறுவடைதான் நாளை அவர் எதிர்நோக்கியிருக்கும் தேர்தல்.

தாப்பாவில் சரவணன் அலை வீசுவதை தலைநகர் மக்கள் ஒரு வேளை அறியாமல் இருக்கலாம். ஆனால் களப்பணியாற்றி தேர்தலை ஒட்டியத் தகவல்களைத் திரட்டும் பணியில் டத்தோ சரவணனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்றாகாவேத் தோன்றுகிறது. இந்த ஆக்ககரமான அடைவுநிலை அவரின் கடந்த கால உழைப்பின் குறியீடு.

தன் மீதான மக்களின் அன்பையும் ஆதரவையும் நன்கு புரிந்து வைத்திருந்தாலும், தேர்தலுக்கே உரிய பரப்புரைகளில் கலந்து கொள்ள காலை 7 மணி தொடங்கி பின்னிரவு  மணி வரை கடிகாரமாய் உழைக்கும் அவரின் அரசியல் நேர்மைக்கு இவ்வட்டார மக்கள் தலைவணங்குகிறார்கள்.

நாளை நடைபெறுகின்ற பொதுதேர்தல் யாருக்கு எப்படியோ தெரியாது எங்கள் டத்தோவுக்கு அது இன்னொரு பட்டமளிப்பு விழாதான் என்கின்றனர் தாப்பா நகர மக்கள்